”அக்னி பறவை”

”அக்னி பறவை”
Puthuyugam TV serial Agni Paravai

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரபாகி வருகிறது ”அக்னி பறவை” மெகாத்தொடர் ஆரம்பித்த சில வாரங்களிலே நம்பர் ஒன் இடத்தைபிடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று, வழக்கமான மெகாத் தொடர்களிலிருந்து சற்று மாறுபாட்ட திரைக்கதையுடன், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றி புதியகால்தடத்தை பதித்து வருகிறது இத்தொடர்.

கல்லூரி புரொஃபசராக பணிப் புரிபவர் மாதவி. கல்லூரி மாணவி பூஜாவின் அம்மா சுசிலாவுக்கும், மாதவிக்கும் இடையே விரோதம் ஏற்படுகிறது, ஆனால் அம்மாவை வெறுக்கும் பூஜா மாதவி வீட்டில் தஞ்சம் அடைகிறாள். மாதவியின் தங்கை அம்முவின் கணவன் ரிஷி, பூஜா மீது சற்று பரிவு காட்டுகிறான்.

ஆனால் இது பிடிக்காத அம்மு மாதவியிடம் ரிஷியும் பூஜாவும் தவறாக பழகுகிறார்கள் என்று முறையிடுகிறாள். மறுபுறம் மாதவியின் கணவன் ஜீவாவை கொன்ற கோபி, தன்னை இச் சூழ்நிலைக்கு தள்ளியவர்களை பழிவாங்க துடிக்கிறான்.

மாதவியை சுசிலா என்ன செய்ய போகிறாள்????

பூஜாவை வீட்டிலிருந்து வெளியேற்றுவாளா மாதவி????

அம்முவை ரிஷி மன்னிப்பானா????

மாதவி கோபிக்கு உதவுவாளா????

போன்ற அனல் பறக்கும் கேள்விகளுக்கு விடைத்தேடுகிறது ”அக்னி பறவை”.

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கும் இத்தொடரின் மறு ஒளிப்பரப்பு காலை 11.00 மணிக்கும் ஒளிப்பரபாகிறது... காணத்தவறாதீர்கள்.

Puthuyugam TV serial Agni Paravai