‘யுகம் அன்பு வாழ்த்துக்கள்’

‘யுகம் அன்பு வாழ்த்துக்கள்’

நமது புதுயுகத்தில். தங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சிறப்பு நாட்களின் பொழுது உங்களது வாழ்த்துக்களை தொலைபேசியின் வாயிலாக தெரிவித்து அந்த அன்பிற்குரியவர்களின் சிறப்பு நாளை மேலும் சிறப்புமிக்கதாக்க புதிய பாடல்களுடனும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களுடனும், இணைந்து அன்றைய தினத்தை மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் துவங்க தினந்தோறும் "யுகம் அன்பு வாழ்த்துக்கள்" நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியின் இடையிடையே தொகுப்பாளர்களின் நகைச்சுவை பேச்சும், அவர்கள் கூறும் அன்பு வாழ்த்தும் தொலைப்பேசியில் பேசுபவர்களுக்கும், நேயர்களுக்கும் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர்கள் மதுரா மற்றும் அசோக மித்திரன் .