“பெப்பர்ஸ் திரைவிமர்சனம்”

“பெப்பர்ஸ் திரைவிமர்சனம்”

ஒரு கதை எழுதி அதை தயாரிப்பாளர்களிடம் சொல்லி, நடிகர் நடிகைகளிடம் சொல்லி அவர்களிடம் ஓகே வாங்கி ஷூட்டிங் தொடங்கி தொய்வில்லாமல் படப்பிடிப்பை முடித்து ரிலீஸிக்கு தயாராகி நல்ல தியேட்டரில் வெளியாவது வரை ஏகப்பட்ட உழைப்பு.

இந்த  உழைப்பு அத்தனையும் ரசிகன் படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்லும் ஒரே ஒரு வார்த்தைக்காகத் தான்.

“பெப்பர்ஸ் திரைவிமர்சனம்” ரசிகனின் மனசாட்சியாய், உள்ளது உள்ளபடி, உண்மையான,  தெளிவான விமர்சனத்தை சொல்கிறது.சினிமாவின் அனைத்து பிரிவினரின் பங்கும் எப்படி இருக்கிறது என்பதை அலசி அவர்களுக்கு ஸ்டார்ஸ் வழங்கி கௌரவிக்கிறது. கேமரா, பாடல்கள், ரீரிகார்டிங், எடிட்டிங், ஆர்ட் இயக்கம் ,கிராபிக்ஸ், நடிகர், நடிகை, வில்லன், மற்ற நடிகர்கள், கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் என அனைத்து தரப்பினருக்கும் தனி தனியாக ஸ்டார்ஸ் வழங்குகிறது.

இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கும்,இதன் மறுஒளிபரப்பு ஞாயிறுகிழமை காலை 8:30 மணிக்கும் “பெப்பர்ஸ்"  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது . இதனை தொகுத்து வழங்குபவர்  வெங்கட் பாலாஜி.