நரேந்திர மோடியே பிரதமராக வரவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நரேந்திர மோடியே பிரதமராக வரவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார், அப்போது பேசிய அவர், வலிமையான தலைமையின் கீழ் பாரதம் இருக்க வேண்டும் என்றார். அந்த பாதுகாப்பு, வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும் தான் என்றும், நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் நலனை தலைமையானதாகக் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாக முதலமைச்சர் கூறினார். மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி என்று இருந்தால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார். அதிகாரத்திற்காக எதை வேண்டும் என்றாலும் செய்யக் கூடிய ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.