கொடநாடு காவலாளி படுகொலை: குற்றவாளி பிடிபட்டான்

கொடநாடு காவலாளி படுகொலை: குற்றவாளி பிடிபட்டான்
Kodanad estate watchman death accused found

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான 1600 ஏக்கர் எஸ்டேட் உள்ளது. இந்த கொடநாடு எஸ்டேட்டில் 5 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட சொகுசு பங்களா உள்ளது.

இந்த சொகுசு பங்களாவில் நேபாளத்தை சேர்ந்த ஓம் பகதூர், வடமாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண பகதூர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஓம் பகதூர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வந்த போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. ஓம் பகதூரை கொன்றது கிருஷ்ண பகதூர் தான் என்பதை போலீஸ் கண்டுப்பிடித்துள்ளனர். கிருஷ்ண பகதூர் தான் இந்த கொலை வழக்கில் மாட்டிக் கொள்ளமால் இருக்க கையில் கையுறை அணிந்து கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர் அந்த கையுறையை தீயிட்டு எரித்துள்ளார்.

ஆனால் அந்த கையுறையில் ஒரு விரல் மற்றும் எரியவில்லை. இந்த தடயத்தை காவல்துறை கைபற்றி ஆய்வு செய்தனர். அந்த கையுறையில் இருந்த கைரேகயை ஆய்வு செய்த போது, கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் ஒத்து போனது. எனவே கிருஷ்ண பகதூர் தான் குற்றவாளி என்பது உறுதியாகி உள்ளது.

Kodanad estate watchman death accused found