‘கெபபாலஜி’ ரெஸ்டாரன்ட்

‘கெபபாலஜி’ ரெஸ்டாரன்ட்
Kebabology Restaurant inaugurated at Alwarpet

ஆழ்வார்பேட்டையில் ‘கெபபாலஜி’ ரெஸ்டாரன்ட்டை திறந்துவைத்த மதுமிதா..!

ஷாவர்மா பிரியர்களின் சொர்க்கமாக உருவாகியுள்ள கெபபாலஜி..!

சாப்பாட்டு போட்டியில் நீங்களும் சூரியா..? கெபபாலஜிக்கு வாங்க..!

சென்னை ஆழ்வார்பேட்டையில் 'கெபபாலஜி' என்கிற புதிய நவீன ரெஸ்டாரன்ட் துவங்கப்பட்டுள்ளது. இதை துவங்கியுள்ள பிரசாந்த் பாலாஜி நடிகை மதுமிதாவின் கணவரான நடிகர் சிவபாலாஜியின் தம்பி தான். இந்த ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவில் மதுமிதா, சிவபாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ரெஸ்டாரண்டில் உள்ளே நுழைபவர்களுக்கு உள்ளே அதன் வடிவமைப்பை பார்த்ததுமே வேறு ஏதோ உலகத்துக்கு வந்துவிட்டது போல தெரியும். அந்த அளவிற்கு வித்தியாசமான தீம்களுடன் இதனை வடிவமைத்துள்ளார் பிரசாந்த் பாலாஜி. அதைப்போலவே இங்கே கிடைக்கும் உணவுகள் பெயர்களில் மட்டுமல்ல, சுவையிலும் வித்தியாசமானவை தான்.

அரபு நாடுகளில் ஷாவர்மா என்கிற உணவு ரொம்பவே பிரசித்தம். பொதுவாக, ஷாவர்மாக்கள் அசைவப்பிரியர்களின் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் இந்த கெபபாலஜியில் தயாராகும் தித்திக்கும் வெஜிடேரியன் ஷாவர்மாக்கள் சைவப்பிரியர்களுக்கு ஒரு விருந்துதான்.

மேலும் லெபனான், ஜப்பான் மற்றும் இந்திய சுவைகளை அப்படியே பல கலவைகளாக மாற்றி இங்கே கொடுக்கிறார்கள் அதுமட்டுமல்ல. இந்த ரெஸ்டாரன்ட்டில் சாப்பிடும் விஷயத்தில் பரோட்டா சூரிக்கு வைத்ததுபோல சில போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதனால் சாப்பிடுவது என்பது ரசித்து செய்யும் ஒரு பொழுதுபோக்காகவும் இங்கே மாறி விடுகிறது.

Kebabology Restaurant inaugurated at Alwarpet