கரோசம்பவ்

கரோசம்பவ்
KaroSambhav e-waste collection Chennai

சென்னை: 2018 பிப்ரவரி 21:  இந்தியா முழுவதும் மின் கழிவு மேலாண்மைத் தீர்வுகள் உருவாக்கல் மற்றும் அமலாக்கத்தில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு, பொறுப்பு, அமைப்பான (பிஆர்ஓ) கரோசம்பவ், காஞ்சிபுரம், மதுராந்தகம், வில்வரவநல்லூர் சுபம் வித்யாலயாவில் பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.  மின் கழிவு சுழற்சி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த நான்கு மாத காலம் வழங்கப்பட்ட பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆப்பிள், டெல், ஹெச்பி, லெனோவா ஆகிய முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மின் மற்றும் மின்னணுக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவும், அன்றாட வாழ்க்கையில் அமலப்டுத்த ஊக்கப்ப்டுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  எம்-டெக், சேவக்ஸ், சூப்பர்ட்ரான், கரோசம்பவ் ஆகிய நிறுவனங்கள் உலக வங்கிக் குழுவின் ஓர் அங்கமான பன்னாட்டு நிதிக் கழகத்துடன் (ஐஎஃப்சி) இணைந்து இந்தியாவுக்கான சுற்றுச்சூழலைப் பாதிக்காத மின் கழிவு தீர்வுகளை உருவாக்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.

திட்டம் குறித்து கரோசம்பவ் நிறுவனர் ப்ரான்ஷு சிங்கால் கூறுகையில் ‘நாளைய சமூதாயத்தை உருவாக்கும் அடித்தளமாகத் திகழ்பவர்கள் இன்றைய மாணவர்கள் என்பதால் மின் கழிவு மேலாண்மை குறித்த அவசியத்தையும், விழிப்புணர்வையும் மட்டுமே ஏற்படுத்தாமல், 21ஆம் நூற்றாண்டுத் திறனையும் வளர்த்துக் கொள்ள இயலச் செய்வதுமே எங்கள் நோக்கமாகும். இணைந்து பணியாற்றல், தீவிரமாக சிந்தித்தல், படைப்புத் திறன், தொடர்பு, ஐசிடி போட்டித் திறன், நிஜ உலகின் பிரச்சிகளுக்கான தீர்வு காணல் உள்ளிட்ட திறன்களைக் கற்றுக் கொண்டுக்கச், சமகால கல்வி தொடர்பான நடைமுறைகளைப் பயன்படுத்தி திட்டத்தை வடிவமைத்துள்ளோம்’ என்றார்.

ஐஎஃப்சி ஆலோசகர் சரினா போலா மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டிப் பேசுகையில்  ‘நமது தலைமுறைக்கு மின் கழிவு என்பது வித்யாசமான சவாலாகும்.  கரோசம்பவுடன் இணைந்த ஐஎஃப்சி இந்தியாவின் மின் கழிவுத் திட்ட நோக்கம் இந்தியாவில் மின் கழிவு மேலாண்மைக்காகச் சுற்றுச்சூழலைப் பாதிக்காத தீர்வைக் கண்டுபிடிப்பதே ஆகும்.  பள்ளிகளுக்கான திட்டங்களும் எங்கள் தொலைநோக்குப் பார்வையில் உள்ளடக்கியவை ஆகும். நண்பர்கள், குடும்பங்கள், மாணவர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் ஆற்றல் மிகு தூதர்களாகத் திகழ்வதால், அவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம் இப்பிரச்சினையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தைக் கொண்டு வர உதவும்’ என்றார்.

5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணாவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டம் சென்னையிலுள்ள 25 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது.  பாராட்டு விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு 5 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதிகபட்சமாக 40 கிலோ மின் கழிவைச் சேகரித்த சுபம் வித்யாலயாவுக்கு  சிறப்பு விருது அளிக்கப்பட்டது.  ஸ்காட் வேர்ல்ட் பள்ளிக்கு கருவிகளின் சிறந்த செயல்பாடு, சிறந்த சமூகத் திட்டம், சமூக ஊடக சாம்ப் ஆகிய 3 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. 

திட்ட அமலாக்கத்தை மேம்படுத்த, 6 பயிற்சிகளை உள்ளடக்கியவாறு வடிவமைக்கப்பட்டது. இது பங்கேற்கும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வளர்க்கத் தேவையான ஆற்றலை வழங்கவும் இயலச் செய்யும். தொடர்ந்து களப்பணி ஆற்றுவதுடன்,  பங்கேற்கும் பள்ளிகளுடன் தொடர்பை உறுதிப்படுத்தியமைக்காகக் கரோசம்பரவ் செயல் கூட்டாளியான ஜுயான டெக்னாலஜீஸ் விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தியது. 

இத்திட்டத்தின் கீழ் கரோசம்பவ் ஒரே ஆண்டில் இந்தியா முழுவதுமுள்ள 1000 பள்ளிகளைச் சம்மந்தப்பட்ட மாநிலக் கல்வித் துறை மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் உதவியுடன் ஒருங்கிணைத்துள்ளது. 

KaroSambhav e-waste collection Chennai