சமையல் செயல்பாடு முறையும் கலந்துரையாடலும்

சமையல் செயல்பாடு முறையும் கலந்துரையாடலும்
International culinary demonstration and Interactive session with Karl Guggenmos

பெருமைமிகு SRM அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் 1993ஆம்ஆண்டு தொடங்கப்பட்ட SRM உணவக மேலாண்மைக்கல்வி நிறுவனம், இத்துறையில் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்குவதாகும். மாணவர்களுக்கு இனிமையான கல்விச்சூழலையும் உள்ளார்ந்த கற்பித்தலையும் எப்பொழுதும் வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம், மாணவர்கள் தம்திறன்களை நன்குவளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதில் சிறப்பாக வளர்ந்தோங்கிப் புகழுடன் விளங்குகிறது.

SRM உணவக மேலாண்மை நிறுவனம் பெப்ரவரி மாதம் 7 ஆம்தேதி காலை 10.00 மணிக்கு மேல் மிக பிரபலமான உலகளாவியவிதத்தில் பிரசித்திப்பெற்ற ஜான்ஸன் அண்ட் வேல்ஸ் பல்கலைகழகத்தின் டீன்மாஸ்டர் செஃப் Karl Guggenmos அவர்களின் சமையல் செயல்பாடு முறையும் கலந்துரையாடலும் நடைபெற்றது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

இந்தசமையல் செயல்பாட்டுமுறைக்கும், கலந்துரையாடலுக்கும் சென்னையில் உள்ள IHM மாணாக்கரும், ASAN கல்லூரியின் மாணவர்களும், SRM IHM ஈக்காடுதாங்கல்லின் மாணவர்கள் மற்றும் SRM IHM காட்டங்களுத்துரின் மாணவர்களும் ஆர்வத்துடனும் பிரமிப்புடனும் எளிமையாக கற்றுக்கொள்ளும்படி திறன் பட செய்துகாட்டினார் மாஸ்டர் செஃப் Karl Guggenmos. அவர் தன்னுடைய திறமையான, சுவையான சமையல் திறன்களையும் நுணுக்கங்களையும் மாணவர்களுக்கு கற்றுகொடுத்தார்.

இக்கருத்தரங்களும், செயல்பாட்டுமுறைகளும் அங்குபயிலும் மாணாக்கருக்கு தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தாங்கள் விரும்பியமேற்படிப்பை தொடரவும் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் ஒரு உறுதியான பாலமாக அமைகிறது.

chef Karl Guggenmos மிகுந்த சுவைமிக்க கண்களைக்கவர்ந்து, வாசனையால் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இத்தாலி நாட்டின் Ricotta Cheese Dumplings மற்றும் சுவையும் மனமும்மிக்க Lemon chicken Piccata with spinach போன்ற கான்டினென்டல் சமையல்உணவுகளை செய்துகாட்டி வளர்ந்து வரும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் திறமையான சமையல் வல்லுநர்களாக திகழவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர்.

இறுதியில் SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் Dr. D. Antony Ashok Kumar அவர்கள் chef Karl Guggenmos அவர்களையும் அவருடன் வந்திருந்த அனைவரையும் கௌரவித்தார்.

International culinary demonstration and Interactive session with Karl Guggenmos