விராட் கோலியை நம்பி இந்திய அணி இல்லை

புது டெல்லி: 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் கபில்தேவ், அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து போது கூறியதாவது:
'தரம்சாலா'வில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் விராட்கோலி விளையாடவில்லை. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. எனவே இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியின் பேட்டிங்கை மட்டுமே நம்பி இல்லை என்று நான் கருதுகிறேன்.
இந்திய அணிக்கு விராட்கோலியின் பங்களிப்பு மகத்தானது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் வெற்றிக்கு, அணியின் மற்ற வீரர்களும் நிறைய பங்களிப்பை அளித்து வருகிறார்கள். நமது அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இருப்பினும் பெரிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அணியின் அனைத்து உறுப்பினர்களும் பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமான தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.