‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’

‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’

‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’ பேராசிரியர். முஹமது ரெலா தமிழ்நாட்டில் 1000 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ள சாதனைக்காக அன்னாரை கௌரவித்துள்ளது

சென்னை, 16 ஜனவரி, 2018: உலகின் முன்னணி சுகாதாரநலம் பேணும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ‘பார்க்வே பான்டாய் என்டர்பிரைஸ்’-இன் ஒரு அங்கமாக இந்தியாவில் செயல்படும் ‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ்’ சங்கிலித்தொடர் மருத்துவமனைகளுள் ஆகப்பெரிய கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள ‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’ மருத்துவமனையானது ‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’யின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான நிறுவனத்தின் தலைவரும் இயக்குநருமான பேராசிரியர். முஹமது ரெலா மற்றும் அவரது குழுவினரை பாராட்டுவதற்காக இன்று சென்னை, ஐடிசி கிராண்டு சோழா ஓட்டலில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.   மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு அரசு, சுகாதாரநலம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு அரசு, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர், டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கௌரவப்படுத்தினர்.  ‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ்’, தலைவர், டாக்டர்.கே. ரவீந்திரநாத் மற்றும் ‘பார்க்வே பான்டாய் லிமிடெட்’டின் இந்திய இயக்கங்கள் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையானது கடந்த 50 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல நோயாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு இரண்டாவது வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஆனால், இந்தியாவில் இது கடந்த தசாப்தமாக மட்டுமே கைவரப்பெற்ற ஒரு உண்மை நிகழ்வாக இருந்துள்ளது. பேராசிரியர். முஹமது ரெலாவின் தலைமையில் வழிநடத்தப்படுகிற ‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’யில் உள்ள கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான நிறுவனம், ஆகஸ்ட் 2009-இல் மேற்கொண்ட தமது முதலாவது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையில் தொடங்கி இதுவரை 1000 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளைத் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இது, நாட்டில் உள்ள மிகவும் வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைத் திட்டங்களுள் ஒன்றாக திகழ்கிறது.   இந்தத் திட்டத்தின் தனித்துவத்தன்மை என்னவெனில் இறந்த கொடையாளர் மற்றும் உயிருள்ள கொடையாளர் ஆகிய இரண்டு பிரிவினரின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளையும் இத்திட்டத்தால் வழங்க முடிந்துள்ளது. ஏனெனில், இறந்த கொடையாளர் உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது. 

கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான நிறுவனம், தனக்குக் கிடைக்கக்கூடிய இறந்த கொடையாளர் உறுப்பை 'பிளந்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை'யின் மூலம் உகந்த முறையில் பயன்படுத்திக்கொள்வதில் முன்னோடியாக உள்ளது. இதில், ஒரு கல்லீரல் பிளக்கப்பட்டு இரண்டு நபர்களுக்கு, வழக்கமாக ஒரு பெரியவருக்கும் ஒரு குழந்தைக்கும்  பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் இத்தகைய 40 பிளந்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான நிறுவனம் 278 இறந்த கொடையாளர் மற்றும் 722 உயிருள்ள கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. 

இந்தத் திட்டம் இப்போது குழந்தைகளிடத்தில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக உலகத்தில் உள்ள ஆகப்பெரிய மையங்களுள் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையின் ஊடாக 278 குழந்தைகள் (மிகவும் இளம்வயது குழந்தைக்கு 4 மாத வயது) பலன் அடைந்துள்ளனர்.  

இந்த மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காகச் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும், இந்த மருத்துவமனையில் உள்ள குழு மேற்கூறிய மையங்களிலும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம், தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வளர்ச்சியடைய உதவியுள்ளது. 

இந்தத் திட்டம் இந்தியா முழுவதும்இருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நோயாளிகளைக் கொண்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மையமானது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச மருத்துவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கு மிகவும் நாடப்படும் ஃபெல்லோஷிப் திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலமாக இது வரை ஏறத்தாழ 25 மருத்துவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

“இந்தச் சாதனை நிகழ்