காங்கிரஸ், மஜத எம்.எல்.எல் ஏக்கள் திடீர் மாயம்!

காங்கிரஸ், மஜத எம்.எல்.எல் ஏக்கள் திடீர் மாயம்!
Congress and JDS mla were absconded

பெங்களூர்: பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. வெற்றி பெற்ற 78 எம்.எல்.ஏக்களில் 66 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர் 12 எம்.எல் ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. எம்எல்ஏ ராஜ வெங்கடப்பா நாயக், மற்றும் வெங்கட ராவ் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளாததன் காரணம் தெரியவில்லை.

காங்கிரஸ்-மதசார்பற்ற கூட்டணியை உடைத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக தலைவர்கள் போனில் அழைப்புவிடுத்துள்ளனர் என டி.கே.சிவகுமார் கூறி உள்ளார்.

கர்நாடகா தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ஆர்.சங்கர் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளிக்க ராஜ்பவன் வருகை தந்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை ஆளுநர் அழைப்பதாக எனக்கு தகவல் வந்தது- என சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.

Congress and JDS mla were absconded