பெட்ரோல் பங்க் விடுமுறை: மத்திய அரசு எதிர்ப்பு

பெட்ரோல் பங்க் விடுமுறை: மத்திய அரசு எதிர்ப்பு
Central govt protest against petrol and diesel bunk holiday

புது டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் மே-14ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்திருந்தார். எரிபொருள் சிக்கனத்துக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:-

பெட்ரோல் விற்பனையாளர்களின் இந்த முடிவு மக்களிடையே எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம், பெட்ரோலிய பொருட்கள், அத்தியாவசிய பொருட்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, தேவைப்பட்டால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை பிரயோகிப்போம். அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளையை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Central govt protest against petrol and diesel bunk holiday