தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி: மு.க.ஸ்டாலின்

தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி: மு.க.ஸ்டாலின்
Black Flag protest against PM Modi

சென்னை: தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் அடுத்தக்கட்டமாக எந்த மாதிரி போராட்டம் நடத்துவது என்பது பற்றி வருகிற 1-ந்தேதி தி.மு.க.வுடன் ஒத்த கருத்துள்ள கட்சி தலைவர்களை ஒன்று கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்க எனக்கு செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ளது.

வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவது என்று தி.மு.க. முடிவு செய்துள்ளது.

இந்த போராட்டத்தை தி.மு.க. முன்னின்று நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Black Flag protest against PM Modi