வங்கிகளில் தொடர் விடுமுறை! அதிகாரிகள் விளக்கம்

வங்கிகளில் தொடர்ச்சியான விடுமுறை குறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:
வரும் மார்ச் 29-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும் 30-ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, ஆனால் 31-ம் தேதியான சனிக்கிழமை வங்கிகள் முழுநாள் செயல்படும். அன்றைய தினமே வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைகளை உள்பட அனைத்து சேவைகளையும் மேற்கொள்ளலாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஞாயிறுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். ஏப்ரல் 2-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம் எனவும், ஆகவே அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் எனவும், ஆனால் பணப் பரிவர்த்தனை மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.