ஐ.பி.ஏ.சி. பாராளுமன்ற தேர்தல் 2019 - கருத்துக்கணிப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கி விட்டன.
இந்த நிலையில் மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஐ.பி.ஏ.சி. என்ற தனியார் நிறுவனம் தற்போது கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று 48 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 11 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9.3 சதவீதம் பேரும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 7 சதவீதம் பேரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 4.2 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 3.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.