நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!

நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!

"நிபுணன்" திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுடன் பணியாற்றிய சக நடிகர் ஸ்ருதி ஹரிஹரன், அவரைப் பற்றி பாலியல் புகார் கூறியுள்ள நிலையில் அவருடன் ‘இருவர் ஒப்பந்தம்’ என்ற படத்தில் நடித்து வரும் நடிகை சோனி செரிஸ்டா அர்ஜுனுக்கு ஆதரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : "அர்ஜூன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன். ஒரு தூய்மையானவர். மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார். நான் நடித்து வரும் இப்படத்தில் அவ்வளவு நாகரீகமாகவும் ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். எந்த அமைப்பாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து. அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கத." என்று அவர் கூறியுள்ளார்.