கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் "மஞ்ச குருவி"

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் புதிய படம் "மஞ்ச குருவி". இன்றைய சமூக சூழலில், மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.

ஆடுகளம், பொல்லாதவன், வட சென்னை, ஹரிதாஸ் போன்ற படங்களில், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய கிஷோர் நாயகனாக நடித்திருக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.

சென்னை அருகே ஆர்ட் டைரக்டர் கே.எம்.நந்தகுமார் அமைத்த பிரமாண்ட செட்டில் கிஷோர், மாஸ்டர் ராஜநாயகம் மோதும் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை, ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா எடுத்துள்ளார்.

வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்து, சௌந்தர்யன் இசையமைத்திருக்கும் மஞ்ச குருவி படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சின்னதம்பி இயக்குனராக அறிமுகமாகிறார்.

மஞ்ச குருவி படத்தின் இசையை விரைவில் வெளியிட, தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் ஏற்பாடு செய்து வருகிறார்.

PRO_கோவிந்தராஜ்