64 வயதில் 3-வது திருமணம்....? வெளிநாட்டை சேர்ந்தவரை மணந்த நடிகை

64 வயதில் 3-வது திருமணம்....? வெளிநாட்டை சேர்ந்தவரை மணந்த நடிகை
64 வயதில் 3-வது திருமணம்....? வெளிநாட்டை சேர்ந்தவரை மணந்த நடிகை

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் பாலச்சந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முன்னதாக ஜெயசுதா தனது 12 வயதில் கமல்ஹாசனுடன் 1972 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பண்டாண்டி கபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1975 இல், அவர் தெலுங்கு திரைப்படமான லக்ஷ்மண ரேகாவில் முன்னணி நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஜோதி என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

'சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள், பட்டிக்காட்டு ராஜா, இரு நிலவுகள், ராசலீலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ரஜினிகாந்தின் 'பாண்டியன்' படத்தில் அவரது சகோதரியாக வந்தார்.

நிதின் கபூர் என்பவரை ஜெயசுதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நிதின் கபூர் மும்பையில் 2017-ம் ஆண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜெயசுதா, இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் 'வாரிசு' படத்தில் விஜய்யின் தாயாக நடித்துள்ளார். தற்போது ஜெயசுதாவுக்கு 64 வயது ஆகிறது. இந்த நிலையில் தொழில் அதிபர் ஒருவரை ஜெயசுதா திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருடன் வந்து கலந்துகொண்டார். அவர் தான் ஜெயசுதாவின் மூன்றாவது கணவர் என தகவல் பரவி வந்தது.

ஜெயசுதா அமெரிக்காவுக்கு ஓய்வு எடுக்க சென்று இருந்ததாகவும், அங்கு வைத்து தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், இந்த வதந்திகளை மறுத்துள்ள ஜெயசுதா, பிலிப் ரூல்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்றும், அவர் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

திரைப்படத் துறையில் தனது பங்கைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்காக அவர் தன்னுடன் வருவதாகவும், மேலும் அவர்களின் உறவுக்கு வேறு எதுவும் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

ஆனால் தற்போது 60 வயதான நடிகை ஜெயசுதா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ஜெயசுதா தரப்பில் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் நடிகை தனது புதிய கணவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயசுதா முதலில் வட்டே ரமேஷை திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவர்களின் உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை, சில எதிர்பாராத காரணங்களால் விரைவில் அவரை விவாகரத்து செய்தார். நடிகை பின்னர் 1985 ஆம் ஆண்டு நடிகர் ஜீதேந்திராவின் உறவினரான தயாரிப்பாளர் நிதின் கபூரை மணந்தார். அவருக்கு நிஹார் மற்றும் ஸ்ரேயன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

நடிகை ஜெயசுதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்ர். தற்போது, 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.