‘டபுள் டக்கர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘டபுள் டக்கர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
‘டபுள் டக்கர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘டபுள் டக்கர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

கோடைக்கால விடுமுறை வந்தாலே, சிறுவர்களுக்கான படங்களை வெளியிடுவதில் ஹாலிவுட் சினிமா அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால், தமிழ் சினிமாவில் இது பழைய கதையாகிவிட்டது. சிறுவர்களுக்கான திரைப்படங்களே இல்லாமல் போன தற்போதைய காலக்கட்டத்தில், அந்த குறையை போக்கும் விதமாக, அனிமேஷன் கதாபாத்திரங்களையும், நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து வெளியாகியிருக்கும் கலகலப்பான படம் தான் ‘டபுள் டக்கர்’.

 

ஒருவரது பிறப்பு முதல் இறப்பு அவரை அவருடன் இரண்டு ஏஞ்சல்கள் பயணிக்குமாம், அவை அந்த மனிதர் செய்யும் நல்லது மற்றும் கெட்டதை குறிப்பெடுத்து கடவுளிடம் ஒப்படைப்பதோடு, அந்த நபரின் ஆயுள் முடிந்த பிறகு அவரது உயிரை கடவுளிடம் ஒப்படைக்கும் பணியையும் செய்து வருகிறதாம். அதன்படி, நாயகன் தீரஜுடன் பயணிக்கும் லெஃப்ட் மற்றும் ரைட் என்ற இரண்டு ஏஞ்சல்கள், அவரது ஆயுள் முடிவதற்குள் தவறுதலாக அவரது உயிரை எடுத்து விடுகிறார்கள். இந்த விசயம் தெரிந்தது, தவறை சரி செய்ய மீண்டும் தீரஜின் உடலில் அவரது உயிரை செலுத்த முடிவு செய்கிறார்கள்.

 

ஆனால், தீரஜின் உடல் மாயமாகிவிடுகிறது. மாயமான தீரஜின் உடலை தேடி கண்டுபிடித்து செய்த தவறை செய்ய முயறிச்க்கும் ஏஞ்சல்கள் ஒரு பக்கம், அவர்களின் தவறால் ஆயுள் முடிவதற்குள் இறந்து போகும் தீரஜின் உயிர் வேறு ஒருவரின் உடலில் செலுத்தப்பட்டு ராஜா என்ற புதியவராக வலம் வர, அதன் மூலம் பல பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்படுகிறது. இறுதியில் இந்த பிரச்சனைகளும், குழப்பங்களும் தீர்ந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்வதான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடிச்சிருக்குற தீரஜ், காதல் காட்சிகளிலும், காமெடி காட்சிகளிலும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார். ஆரம்பத்தில் பாவப்பட்ட முகத்தோடு பரிதாபமாக நடித்திருக்கு அவர் மீது படம் பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படுகிறது.

 

நாயகியாக நடிச்சிருக்கிற ஸ்ருமதி வெங்கட், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருப்பதோடு, நகைச்சுவை ஏரியாவிலும் தனது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.

 

கோவை சரளா, மன்சூர் அலிகான், சுனில் ரெட்டி, ஷாரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர் என அத்தனை பேரும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்..

 

லெஃப்ட் மற்றும் ரைட் என்ற கதாபாத்திரத்திரங்களாக வரும் அனிமேஷன் உருவங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் காளிவெங்கட் பின்னணி குரலால் தியேட்டரில் சிரிப்பு சத்தம் அதிகரிக்கிறது.

 

வித்யாசாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு நேர்த்தி.

 

இயக்குநர் மீரா மஹதி, ஃபேண்டஸி நகைச்சுவை கதையை, அனிமேஷன் கதாபாத்திரங்களை கொண்டு மிக நேர்த்தியான காட்சிகள் மூலம் திருப்பங்கள் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

 

லெஃப்ட் மற்றும் ரைட் என்ற் அனிமேஷன் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் திரைக்கதையோடு பயணிக்கும் அவற்றின் காட்சிகள், அதில் இடம் பெறும் திரை நட்சத்திர கதாபாத்திரங்கள் என்று படம் முழுவதையும் நகைச்சுவையாக நகர்த்தி சென்றிருப்பதோடு, சிறுவர்களை கொண்டாட வைக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் மீரா மஹதிக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.