சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்வு

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்வு
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்வு

சென்னை: சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்ததால் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்தது.

கடந்த இரு பருவமழைகளும் பொய்த்துவிட்டதால் கோடை காலத்தில் சென்னையில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் குடிநீருக்காக அல்லோகப்பட்டனர். இரவு பகல் பாராமல் தண்ணீரை தேடி அலைந்தனர்.

தூக்கத்தை தொலைத்து கூலித் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு தண்ணீர் வரும் லாரிகளுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்த நிலை ஏற்பட்டது.

நிலத்தடி: மாநகராட்சிகளும் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வந்தது. எனினும் தண்ணீர் பற்றாக்குறை தணியவில்லை. இந்த நிலையில் கோடை காலத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே சென்னையில் மழை பெய்தது. எனினும் அது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதாக இல்லை.


வானிலை மையம் :ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை நீரை பிடித்து மக்கள் பயன்படுத்தினர். இந்த நிலையில் கடந்த வாரமும் சென்னையில் நல்ல மழை பெய்தது. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்குமாறு வானிலை மைய நிபுணர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

4 நாட்கள் மழை: இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசை காரணமாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் :இந்த நிலையில் சென்னையில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். அப்போது மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது