தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் இணைகிறார்கள்- துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்

தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் இணைகிறார்கள்- துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்

பெங்களூரு:டெல்லியில் அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜனதாவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பா.ஜனதா கட்சிக்கு வரும் அவர்களை வரவேற்கிறோம். இதுதொடர்பாக அவர்கள் மூத்த தலைவர்களை சந்தித்து பேசியுள்ளனர். பா.ஜனதா கட்சியில் சேரும்படி அவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. அவர்கள் பா.ஜனதா கட்சியில் சேர விரும்பினர். அதன்படி கட்சியில் சேர உள்ளனர்.