ஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, 7:10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு செல்கிறது. கடந்த, 11ம் தேதி புறப்பட்டு சென்று ஊட்டி மலை ரயில் ஆடர்லி – ஹில்குரோவ் இடையே ரயில் பாதையில் பாறை விழுந்ததால் ரத்து செய்யப்பட்டது. பாறை மற்றும் மண்ணை, ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மலை ரயிலை ரயில்வே நிர்வாகம் இன்று முதல் மீண்டும் இயக்க உள்ளது.