பெயரை மாற்றிக்கொண்ட பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர்

பெயரை மாற்றிக்கொண்ட பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர்

இயக்குனர் வசந்த் தன் பெயரை வசந்த் எஸ்.சாய் என்று மாற்றிக்கொண்டு "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்", என்ற பெயரில் படம் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் பார்வதி, காளிஸ்வரி, சீனிவாசன், லக்ஷ்மி ப்ரியா, சந்திர மௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய கதைக்கு திரைக்கதை, வசனம், டைரக்ஷன், தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை வசந்த் எஸ். சாய் ஏற்றுள்ளார்.

இப்படத்தை வைட் ஆங்கிள் ரவிசங்கர், எஸ்.கே. ஏகாம்பரம் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர், சித்ரா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் படம் தயாராகி வருகிறது.

இப்படம் மும்பையில் நடைபெற இருக்கும் சர்வதேச படவிழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.