விவசாயி தற்கொலை: இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன் குடிக்காடு திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயி திரு. சுந்தர்ராஜன் கஜா புயல் பாதிப்பினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது குடும்பத்தாரை இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், திருமுருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஐம்பதினாயிரம் ரூபாய் உதவியும் வழங்கினர். பொருளாதார வசதியுள்ள நல்ல உள்ளங்கள் இவர்கள் குடும்பத்தாருக்கு மேலும் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.