'வேந்தரின் விருந்தினர்'
வேந்தர் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 'வேந்தரின் விருந்தினர்'. இந்நிகழ்ச்சி பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் சாதனைகளை பற்றியும் அவர்கள் வாழ்க்கை பயணங்களையும் அதில் நடந்த சுவாரஸ்யமான, ஊக்குவிக்கும் விஷயங்களையும், மக்களுக்கு கொண்டுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் விருந்தினராய் கலந்துகொள்கிறவர்களை கலகப்பாகவும் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் புதிய பகுதிகளை கொண்டு, நேயர்கள் அனைவரும் கலகலப்பாக ரசிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியை சுமித்ரா தொகுத்து வழங்குகிறார்.