31-வது பிறந்தநாளில் விராட் கோலி தனக்கே எழுதிய வாழ்த்து கடிதம்!

31-வது பிறந்தநாளில் விராட் கோலி தனக்கே எழுதிய வாழ்த்து கடிதம்!

 இந்திய கிரிக்கெட்அணியின் கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தாளை இன்று கொண்டாடுகிறார். 82 டெஸ்ட் போட்டிகள், 239 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் சாதனை பட்டியல் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது; இருக்கும்.தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கானபேட்ஸ்மேன்கள்தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும்உள்ளார் விராட் கோலி.

இந்நிலையில், இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி, 15 வயது விராட் கோலிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "ஹாய் சிக்கு, முதலில், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! உன் எதிர்காலத்தை பற்றி என்னிடம் கேட்க நிறைய கேள்விகள் வைத்திருப்பாய் என்று தெரியும். மன்னிக்கவும், ஏனெனில் நிறைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாதவரை தான் ஒவ்வொரு ஆச்சரியமும் இனியதாக இருக்கும், ஒவ்வொரு சவாலும் சுவாரசியமாக இருக்கும், ஒவ்வொரு துன்பமும் பாடமாக இருக்கும். இன்று நீ இதை அறிந்திருக்க மாட்டாய் என்றாலும், இலக்கை விட பயணமே பெரியது. மேலும், அப்பயணம் சிறப்பானதாகும்!