பெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே பாடம் கற்கும் மாணவர்கள்

பெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே பாடம் கற்கும் மாணவர்கள்

இப்போது பெரு நாட்டில், இடிந்து விழும் நிலையிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள், பள்ளிக்கு வெளியே திறந்த வெளியில் கடும் குளிரில் பாடம் கற்று வருகிறார்கள் . பெருநாட்டில் பெய்த பெரும் மழையால் , சில பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்தன . இதனையடுத்து அந்த பள்ளிக் கட்டிடத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், உள்ளே இருந்த மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களையும் அப்புறப்படுத்தி சுமந்து கொண்டு சென்றனர் . அவற்றை பள்ளிகளுக்கு அருகில் திறந்த வெளியில் போட்டு, மழை-குளிருக்கு இடையே மாணவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டு வருகிறது.