இன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை

இன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை
இன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை

சென்னையில் இன்று அதிகாலையில் முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ராயப்பேட்டை, மெரினா, அடையாறு, அமைந்தக்கரை, கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை தூறலாகத் தொடங்கிய மழை, பின்னர் மிதமாகப் பெய்தது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், பனிக்காற்று மறைந்து தூறல் போட ஆரம்பித்தது.

இந்நிலையில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.