ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு

ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு
ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு

ஆட்டோமொபைல் உதிரிபாகங் கள் விற்பனை ஏப்ரல் முதல் செப் டம்பர் வரையிலான காலத்தில் 10 சதவீதம் அளவில் சரிந்துள்ளதாக ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏசிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் உதிரிபாகங்கள் விற்பனை ரூ. 2 லட்சம் கோடி அளவில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு விற்பனை 10 சதவீதம் அளவில் குறைந்து ரூ.1.8 லட்சம் கோடியாக உள்ளது.

இதுகுறித்து ஏசிஎம்ஏ-ன் தலைவர் தீபக் ஜெயின் கூறுகை யில், ஆட்டோமொபைல் துறை மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது. வாகன விற்பனை கடந்த ஒரு வருடத்தில் கடுமையாக சரிந்து உள்ளது. வாகனத் தயாரிப்பு நிறு வனங்கள் 20 சதவீத அளவில் உற்பத்தியை குறைத்துள்ளன. இத னால் உதிரிபாக உற்பத்தி பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு காரணத்தினால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் 1 லட்சம் தற்காலிக ஊழி யர்கள் வேலை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.