டெல்லியில் வித்யாசமான பிரச்சனை: பயிற்சியை கைவிட்ட இந்திய வீரர்கள்!

டெல்லியில் வித்யாசமான பிரச்சனை: பயிற்சியை கைவிட்ட இந்திய வீரர்கள்!

டெல்லியில்,காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதால்,இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே, ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக்கும் டி-20 போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் இந்தியா -பங்களாதேஷ்  அணிகளுக்கு  இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடக்குமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்று கேள்வி எழுந்தது.

இதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்டபோது, ' திட்டமிட்டபடி, போட்டி டெல்லியில் நடக்கும்' என்றார்.