தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள கணக்கு மேலாளர் மற்றும் WTP ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Accounts) - 1
சம்பளம்: மாதம் ரூ. 33600 - 1,32,192
தகுதி: பட்டய கணக்காளர் (சி.ஏ.) முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.09.2019 தேதியின்படி 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: WTP ஆப்ரேட்டர் - 05
தகுதி: முதல் வகுப்பில் பொறியியல் துறையில் வேதியியல் பொறியியல், வேதியியல் தொழில்நுட்பம் பிரிவில் டிப்ளமோ, முழுநேர பி.எஸ்சி வேதியியல் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 01.09.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,141 - ரூ.43,494

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief General Manager, Tamil Nadu Newsprint And Papers Limited, Kagithapuram, Karur - 639136.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpl.com/uploads/careers/4bb2af3e5feecf843266c5992a417f33.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.10.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2019