லாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை உயர்த்தியது குடிநீர் வாரியம்

லாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை உயர்த்தியது குடிநீர் வாரியம்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு லாரிகளில் வழங்கப்படும் தண்ணீரின் விலையை சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது.

லாரியில் வழங்கும் 9000 லிட்டர் தண்ணீரின் விலை        இதுவரை     ரூ.700ஆக இருந்தநிலையில்தற்போதுரூ.735ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேப்போல 6 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீரின் விலை ரூ.435 ஆக இருந்த நிலையில்,இனிரூ.499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி, வணிக ரீதியில் விற்கப்படும் 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.500க்கும், ஆறு ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.735க்கும், 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.1050க்கும் 12 ஆயிரம் லிட்டர் ரூ.1,400க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.