ரீல் முதல் ரியாலிட்டி வரை! 

ரீல் முதல் ரியாலிட்டி வரை! 
ரீல் முதல் ரியாலிட்டி வரை! 
ரீல் முதல் ரியாலிட்டி வரை! 
ரீல் முதல் ரியாலிட்டி வரை! 
ரீல் முதல் ரியாலிட்டி வரை! 
ரீல் முதல் ரியாலிட்டி வரை! 
ரீல் முதல் ரியாலிட்டி வரை! 
ரீல் முதல் ரியாலிட்டி வரை! 

ரீல் முதல் ரியாலிட்டி வரை! 


இந்த வாரம் கலர்ஸ் தமிழ் அலைவரிசையை நீங்கள் தவறவிடாமல் பார்ப்பதற்கான காரணம் இதோ!


~ பிரமிக்க வைக்கும் செயல்திறனை வெளிப்படுத்தி விருதை வெல்ல நட்சத்திரங்கள் முனைப்புடன் மோதுகின்ற நிலையில் பார்வையாளர்களை இந்தவாரம்  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பரவசப்படுத்துவது  நிச்சயம் ~
சென்னை, 5 மார்ச் 2021: கிளர்ச்சியும், குதூகலமும் கலந்த நிகழ்ச்சிகளின் மூலம் இந்த வார நாட்களை இனிதானதாக ஆக்குவதற்கு உங்கள் தொலைக்காட்சி திரைகளுக்கு சிறப்பான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொண்டுவர கலர்ஸ் தமிழ் தயார்நிலையில் இருக்கிறது.  பாடுவதற்கு சிரமமான பஜனைப் பாடல்களை பிரபல இசைக் கலைஞர்கள் பாடுகின்ற தெய்வீக நிகழ்ச்சி முதல், முன்னணி நட்சத்திரங்களின் மெய்மறக்கச் செய்யும் பெர்ஃபார்மென்ஸ் வரை  உங்கள் தொலைக்காட்சி திரைகளை விட்டு வேறு எங்கும் கண்களை திருப்பாமல், உங்களை மெய்மறக்குமாறு இந்த நிகழ்ச்சிகள் இருப்பது நிச்சயம்.  2021 மார்ச் 7 ஆம் தேதி, ஞாயிறு இரவு 7:00 மணி முதல், கலர்ஸ் தமிழில் இந்நிகழ்ச்சிகளை தவறவிடாமல் நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்கான மூன்று அடிப்படை காரணங்கள் இதோ:
 
அற்புதமான தெய்வீக இசை நிகழ்ச்சி: மாபெரும் இறுதிப்போட்டிக்கான உற்சாகம் பன்மடங்கு அதிகரித்து வருகின்ற நிலையில், பல்வேறு மொழிகளில் பஜனைப் பாடல்களை பாடி வழங்குமாறு பஜனை இசைக்குழுக்களை ஊக்குவிப்பதன் மூலம் பஜன் சாம்ராட் நிகழ்ச்சியின் இந்தவார எபிசோடு, அக்குழுக்களிடமிருந்து மிகச்சிறந்த இசைத்திறனை வெளிக்கொணரும் என்பது உறுதி.  மராத்தி மொழியில் அபாங் சுற்றில் பாடுவதிலிருந்து, இந்தி மொழியில் மிக அரிதான பஜனைப் பாடல்களின் மீது சிறப்பு கவனம் செலுத்துவது வரை, கௌரவம் மிக்க இவ்விருதை வெல்வதற்கான யுத்தம் இப்போது இன்னும் பெரிதாக உருவெடுத்திருக்கிறது.  
 
அற்புதமான இசை விருந்து: டாக்டர். ஆர். கணேஷ் மற்றும் திருமதி. மஹதி ஆகிய முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள் நடுவர்களாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற நிலையில், இந்நிகழ்ச்சி இன்னும் புதிய உச்சங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தங்களது சிறப்பான கருத்துகளை வழங்கி, சிறப்பான திறனை வெளிப்படுத்த பஜனைப்பாடல் குழுக்களுக்கு நடுவர்கள் வழிகாட்டி வருவதால், அவர்களது ஒவ்வொரு பங்கேற்பிலும் இசை நுணுக்கங்களை மிக நேர்த்தியாக பக்தி மணம் கமழ வழங்குவதற்கு இக்குழுக்கள் தங்களையே தயார்செய்து வருகின்றன.  
 
கொண்டாட்ட நேரம்:  முழுமையான பொழுதுபோக்கும், குதூகலமும் வேண்டுமென்று நீங்கள் தேடிக்கொண்டிருப்பீரானால், கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நிகழ்ச்சியான, கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் உங்கள் மனதின் விருப்பத்தை முழுமையாக பூர்த்திசெய்யும்.  இதயத்தை திருடாதே மற்றும் உயிரே ஆகிய நெடுந்தொடர்களின் நட்சத்திர பட்டாளம், கண்கவர் நடனங்கள் மற்றும் விளையாட்டுகளின் வழியாக பார்வையாளர்களை கட்டிப்போடுவது நிச்சயம்.  இந்நிகழ்ச்சி, பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு மட்டுமின்றி, பார்வையாளர்களையும் குதூகலத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.  
 
நகைச்சுவை அதகளம்: பார்வையாளர்களுக்கு சிறப்பான விருந்தைப்படைக்கும் குறிக்கோளோடு களமிறங்கியிருக்கும் சிஎஸ்கே நிகழ்ச்சியில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்கள் முல்லை மற்றும் கோதண்டம் பங்கேற்கின்றனர்.  சிரித்து, சிரித்து பார்ப்பவர்களின் வயிறு வலிக்கச் செய்யும் அற்புதமான நகைச்சுவை நடிப்பிற்கு பிரபலமான இந்த நகைச்சுவை இரட்டையர்கள், பிற கலைஞர்களை கேலியும், கிண்டலும் செய்து உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவிருக்கின்றனர்.