தமிழ்நாடு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது!

தமிழ்நாடு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது!

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைமைச்செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கிழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நாளை கொண்டாட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி கடந்த 21 தேதி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள சட்டபேரவை, நுழைவாயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், இணையோர் அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

காலை 10:00 மணியிலிருந்து 10:30 வரை மங்கள இசை; 10:30ல் இருந்து 11:30 மணி வரை ‘செயல் செய்வாய் தமிழுக்கு துறைதோறும்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்க உள்ளது.காலை 11:30 மணியிலிருந்து பகல் 12:30 வரை ‘அன்பு பதிந்த இடம்; எங்கள் ஆட்சி பிறந்த இடம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம்; 12:30 முதல் 1:30 மணி வரை ‘எங்கள் மண்ணில் எங்கள் ஆட்சியே’ என்ற தலைப்பில் இளையோர் அரங்கம் நடக்க உள்ளது. பகல் 2:00 மணியில் இருந்து 3:00 வரை மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள்; 3:00 மணி முதல் 4:00 வரை தமிழ் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.