டெல்லியில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்கு தடை

டெல்லியில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்கு தடை

டெல்லியில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 27-ஆம் தேதி தீபாவளி திருநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.இதற்காக ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.இதனையொட்டி டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்தது.இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது .காற்று மாசை குறைக்க டெல்லியில் நவம்பர் 5ம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியதால் தடை விதிக்கப்பட்டுள்ளது .காற்று மாசு தரக்குறியீடு 533 புள்ளிகள் என்ற அபாய கட்டத்தை எட்டியுள்ளது.