"செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறை" - அமெரிக்க வாழ் இந்தியர் விடுவிக்கப்பட்டும் தீராத சட்டப் போராட்டம்

அமெரிக்காவில், தான் செய்யாத ஒரு கொலைக்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த சுப்ரமண்யம் 'சுப்பு' வேதம் இப்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தன்னுடன் தங்கியவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் புதிய ஆதாரம் கிடைத்ததால் இந்த மாத தொடக்கத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், அவர் தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்வதற்கு முன்பே, அமெரிக்க குடியேறுதல் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அவரைக் காவலில் எடுத்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்போவதாகக் கூறியிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே வேதம் இந்தியாவில் வசித்ததில்லை.

இப்போது வேதத்தின் வழக்கறிஞர்கள் அவரை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், அவரை முழுமையாக விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு அவரது குடும்பமும் காத்திருக்கிறது.

ஒரு புதிய, "மிகவும் வித்தியாசமான" சூழ்நிலையை கடந்து வருவதற்காக அவரது குடும்பம் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது என்று அவரது சகோதரி சரஸ்வதி வேதம் பிபிசியிடம் தெரிவித்தார்.