"தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக" - கமல் வாழ்த்து

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்பி, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (அக்.20) அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்; தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக” என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீபாவளி வாழ்த்து கூறி வருகின்றனர்.