சசிகலா எந்நேரமும் விடுதலை ஆகலாம் கர்நாடக சிறைத் துறை அறிவிப்பு

சசிகலா எந்நேரமும் விடுதலை ஆகலாம் கர்நாடக சிறைத் துறை அறிவிப்பு
சசிகலா எந்நேரமும் விடுதலை ஆகலாம் கர்நாடக சிறைத் துறை அறிவிப்பு

சசிகலா எந்நேரமும் விடுதலை ஆகலாம் கர்நாடக சிறைத் துறை அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறை விதிகளின் படி, அவர் கடந்த ஆகஸ்ட் மாதமே விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா விடுதலை தொடர்பாக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. அவரின் தண்டனை காலம் ஜனவரி 27ஆம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து உள்ளார்.

இதனையடுத்து பரப்பனா அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகள் சசிகலாவின் விண்ணப்பத்தை சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் விண்ணப்பம் மீது முடிவு எடுக்கப்பட்டு அவர் எந்நேரமும் விடுதலை ஆகலாம் என கர்நாடக சிறைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக சசிகலா, வரும் 5 ஆம் தேதி அவரது தோழியும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் நினைவு நாளுக்கு சிறையிலிருந்து விடுதலையாவர் என எதிர்பார்க்கப்பட்டது.