உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் !!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியபோது, இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்திருந்தன. இதனால் தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் சமநிலை எடுத்ததால், இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல கடும் விமர்சனங்கள் நிகழ்ந்தன. தற்போது, ஐ.சி.சிசூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்து, ஐ.சி.சி. 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது