உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.
இந்த நிலையில் இதே கல்லூரியில் கல்வியியல் பட்டப்படிப்பு படித்து வந்த செந்தாமரைகண்ணன் மகன் நவீன் (25) என்பவர், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் தற்போது இளம்பெண் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் நவீன், திடீரென அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் நவீன் பெற்றோர், வேறு இடத்தில் அவருக்கு பெண் பார்த்து வந்துள்ளனர்.

இது குறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, அதில் நவீன் மற்றும் ராமசாமி ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, பின்னர் திருமணம் செய்ய மறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.