“வரலாற்றில் இன்று”

“வரலாற்றில் இன்று”

அன்றைய தினத்தில் வரலாற்றில் நடந்த சம்பவங்களை தினம் தினம் நேயர்களுக்கு சுவாரசியமாக கொடுத்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் “வரலாற்றில் இன்று”. இந்நிகழ்ச்சி தினமும் காலை 7:30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

இதில் ஒரு முக்கிய நிகழ்வை பற்றியோ, இடத்தை பற்றியோ அல்லது வரலாற்றில் இடம்பிடித்த முக்கியமான நபர்களை பற்றியோ கொஞ்சமும் அதன் சரித்திர உண்மைத்தன்மை மாறாமல் தினமும் கொடுத்து வருகிறது.

மறந்த வரலாற்றின் பக்கங்களை, வரலாற்றில் அன்றைய தேதிகளின் நடந்த நிகழ்வுள், உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் சாதனையாளர்களின் பிறந்த நாள், நம்மை விட்டு மறைந்த நாள், உலக சாதனைகள் நடந்த தினம் என்று, தினமும் சரித்திர நிகழ்வுகளை நினைவுக்கூறும் ஒரு நிகழ்ச்சிதான் வரலாற்றில் இன்று.

வரலாற்றில் நடந்த சம்பவங்களை வைத்து தான் ஒரு மனிதன் எப்படி தன் வாழ்க்கையில் வாழ வேண்டும் என்பதை கற்றுகொள்கின்றான். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்ககூடிய ஒரு நிகழ்ச்சியாக இருகின்றது.