“சினிமேக்ஸ்”

“சினிமேக்ஸ்”

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில், சினிமா உலகைப் பற்றின பல விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லும் சினிமேக்ஸ் நிகழ்ச்சி ஓளிபரப்பு ஆகி வருகின்றது.

தமிழ் சினிமாவுலக செய்திகளை சுவாரஸ்யம் கலந்து சொல்லும் “பாப்கார்ன்”, பிறமொழி சினிமா உலக செய்திகளை எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொல்லும் “BTM", ஒரு ஸ்டாருக்கும் காருக்கும் இடையே இருக்கும் உறவை பேசும் “ஸ்டாரும் காரும்”, தன் சினிமா பயணத்தின் அழகான நிகழ்வுகளை சினிமா பிரபலங்கள் பகிரும் “கிளாசிக் தருணங்கள்”, கோலிவுட் வட்டார விழாக்களுக்கு கூட்டி செல்லும்  “போஸ்டர் ”, படமோ பாடலோ கருவாகி உருவானதைப் பற்றி உருவாக்கினவர்களே விளக்கும் “கருவும் உருவும்”, வெளியாகும் புதிய படங்களை நேர்மையோடும் நடுநிலையோடும் விமர்சனம் செய்யும் “சினிமா ஃபோகஸ்” என ஓவ்வொரு நாளும் வித்தியாச வித்தியாசமான பகுதிகளோடு சினிமாவை பற்றிய மேக்ஸிமம் விஷயங்களைச் சொல்லும் சினிமேக்ஸ் நிகழ்ச்சியை நிவேதிதா மற்றும் சுதர்சனா தொகுத்து வழங்குகின்றனர். 

இந்நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 11:00 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கண்டு களிக்களாம்..