நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் "நம்ம ஏரியா"
நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 8:30 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி “நம்ம ஏரியா ".
சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி வரை உள்ள நிகழ்வுகளின் தொகுப்பே நம்ம ஏரியா நிகழ்ச்சியாகும்.தமிழகத்தின் 234 தொகுதிகளில் தினந்தோரும் நிகழும் அதி முக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இந்த தொகுப்பில் இடம்பெறுகின்றன. மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், விவசாயிகளின் கோரிக்கைகள், மாணவர் போராட்டஙகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மறியல் போராட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ,விளையாட்டு செய்திகள், குற்ற நிகழ்வுகள் என அனைத்து வகை செய்திகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழக மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கும் “நம்ம ஏரியா " செய்தி தொகுப்பு தினந்தோறும் காலை 8:30 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும்நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை நிவேதிதா தொகுத்து வழங்குகின்றனர் .