புதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி?

புதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி?

புது டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக சௌரவ் கங்குலி பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடைய மகள் ஜெய் ஷா புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் பதவியேற்க உள்ளனர். முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் உடைய மகன் அருண் துமால் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தினம் என்றாலும், போட்டியின்றி புதிய நிர்வாகிகள்தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கு வங்க கிரிகெட் சங்கத்தின் தலைவராக தற்போது சௌரவ் கங்குலி பதவி வகிக்கிறார். 2021மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளிப்பது குறித்து கங்குலி தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், பிசிசிஐ தலைவராக அவர் தேர்வாவதில் இழுபறி நீடித்தது.

இதற்கிடையே, முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநிவாசன் ஆதரவு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரிஜேஷ் படேல் தலைவராக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. இருப்பினும், பாஜகவிற்கு சௌரவ் கங்குலி ஆதரவளிக்க நிர்பந்தித்த விவகாரத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது கங்குலி தேர்வாவது உறுதியாகி உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிஜேஷ் படேலும்ஐபிஎல் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. லோதா கமிட்டி பரிந்துரையின் படி கடந்த 33 மாதங்களாக உச்சநீதிமன்றம் அமைத்த நிர்வாகக் குழு கட்டுப்பாட்டில் பிசிசிஐ செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய நிர்வாகிகள் தேர்வாக உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கீர்த்தி ஆசாத், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் ஆண் பிரதிநிதியாக பிசிசிஐ உயர்மட்டக் குழுவிற்கு தேர்வு செய்யப்பட உள்ளார். முன்னதாக, சாந்தா ரங்கசுவாமி பெண் பிரதிநியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.