கடலூரில் கன மழை கொட்டியது! ஒரு மணி நேரத்தில் 47.40 மில்லி மீட்டர் பதிவு

கடலூரில் கன மழை கொட்டியது! ஒரு மணி நேரத்தில் 47.40 மில்லி மீட்டர் பதிவு
கடலூரில் கன மழை கொட்டியது! ஒரு மணி நேரத்தில் 47.40 மில்லி மீட்டர் பதிவு

கடலுார்: வெப்ப சலனம் காரணமாக கடலுாரில் ஒரு மணி நேரம் பெய்த பேய் மழையால், நகர பகுதியில் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரத்தில் 47.40 மி.மீ., மழை பதிவானது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை ஒரு மணி நேரத்தில் பெய்த மழையளவு வருமாறு:கடலுார் 47.40 மி.மீ., பரங்கிப்பேட்டை 33, புவனகிரி 14, குறிஞ்சிப்பாடி 11, வானமாதேவி 7, குடிதாங்கி 7, அண்ணாமலை நகர் 6.80, லால்பேட்டை 6, கொத்தவாச்சேரி 6, பண்ருட்டி 6, சேத்தியாத்தோப்பு 5.40, சிதம்பரம் 3, காட்டுமன்னார்கோவில் 2, வடக்குத்து 2 மி.மீ., மழை பெய்துள்ளது.பந்தல் பணி பாதிப்புகடலுாரில் திடீரென நேற்று பெய்த கன மழையால், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தண்ணீர் ஏரிபோல் தேங்கியது.