செல்ஃபி புள்ள Moment.. - ’ஹீரோ’யினுடன் சிவகார்த்திகேயனின் ஒரு கிளிக்!

 செல்ஃபி புள்ள Moment.. - ’ஹீரோ’யினுடன் சிவகார்த்திகேயனின் ஒரு கிளிக்!

'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்தை 'ஹீரோ' படத்தை இயக்கி வருகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மேலும், ஆக்சன் கிங் அர்ஜூன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் கதாநாயகி கல்யாணி தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் செல்ஃபி எடுப்பது போன்ற ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், நீங்கள் எங்களுடைய செல்ஃபியை கேட்டிங்க இல்ல ? இதோ என்று குறிப்பிட்டுள்ளார்.