மிஷ்கினின் ‘துப்பறிவாளன் 2’- லண்டனில் கனியன் பூங்குன்றனின் ஆக்ஷன் வேட்டை ஆரம்பம்..!

மிஷ்கினின் ‘துப்பறிவாளன் 2’- லண்டனில் கனியன் பூங்குன்றனின் ஆக்ஷன் வேட்டை ஆரம்பம்..!
மிஷ்கினின் ‘துப்பறிவாளன் 2’- லண்டனில் கனியன் பூங்குன்றனின் ஆக்ஷன் வேட்டை ஆரம்பம்..!

கடந்த 2017ம் ஆண்டு நடிகர் விஷால், பிரசன்னா நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் இயக்குநர் மிஷ்கின் பிசியாக இருந்து வருகிறார். லண்டனில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் மியூசியத்திற்கு சென்றதுடன், அங்கு இயக்குநர் மிஷ்கின் லொகேஷன் தேடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் தயாரித்து வரும் இப்படத்தில் ஆஷ்யா என்ற நாயகி அறிமுகமாகிறார். மேலும் பிரசன்னா, நாசர், ரஹ்மான், கவுதமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்த நிலையில், நடிகர் பிரசன்னா தற்போது விஷாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அவரது ட்வீட்டில், ‘கணியன் பூங்குன்றன் மற்றும் மனோ பேக் இன் ஆக்ஷன், ஆனால் இம்முறை வேட்டை லண்டனில்..’ என குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.