அல்லு அர்ஜுனை இயக்குகிறார் நெல்சன்?

அல்லு அர்ஜுனை இயக்குகிறார் நெல்சன்?
அல்லு அர்ஜுனை இயக்குகிறார் நெல்சன்?

‘கோலமாவு கோகிலா’படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து விஜய்யின் ‘பீஸ்ட்’, ரஜினியின் ‘ஜெயிலர்’ படங்களை இயக்கினார். ‘ஜெயிலர்’ சூப்பர் ஹிட்டானது. அடுத்து இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை அவர்இயக்க போவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் அல்லு அர்ஜுனை இயக்க இருக்கிறார்.

‘புஷ்பா’வுக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள அல்லு அர்ஜுன், அட்லி இயக்கத்தில் நடிக்க இருந்தார். சம்பளப் பிரச்சினை காரணமாக அட்லி விலகிவிட்டார். இந்நிலையில் அல்லு அர்ஜுனை, நெல்சன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது நெல்சன் சொன்ன லைன் பிடித்திருந்ததால் அதற்கு அல்லு அர்ஜுன் ஓகே சொல்லி விட்டதாக தெலுங்கு சினிமா துறையில் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் இப்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார்.