உங்கள் சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் நையாண்டி
உங்கள் சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்
நையாண்டி – நகைச்சுவை நிகழ்ச்சியில்
கவனிக்க வேண்டிய முக்கிய ஐந்து விஷயங்கள்
நகைச்சுவை என்பது வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் ஆகும். பல துணை வகைகளைக் கொண்ட நகைச்சுவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே விருப்பமான தேர்வாக இருக்கின்றன. அந்த வரிசையில் தமிழகத்தின் மிக சிறந்த இளைய பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழின் கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 சேருவதால், பார்வையாளர்களை சிரிக்கவைப்பதோடு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உற்சபடுத்தும் என்பது உறுதி.
இந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் சில அற்புதமான விஷயங்களைப் பார்ப்போம்.
1. கதாபாத்திரங்களின் சுவாரஸ்யமான கலவை
கதாபாத்திரங்கள் ஒரு சிறந்த நகைச்சுவைக்கு சாராம்சம் ஆகும். ரோபோ ஷங்கரால் சித்தரிக்கப்பட்ட ஜல்சானந்தா, ராஜமாதா வேடத்தில் ஷகீலா போன்ற நகைச்சுவையான பெயர்களைக் கொண்ட கதாபாத்திரங்களை கன்னி தீவு காட்டுகிறது. ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த வேடிக்கையான கதாபாத்திரத்தைத் தவிர, பேபி மாதா, ராஜ குரு, விஞ்ஞானிகள் மற்றும் பல துணை கதாபாத்திரங்களின் விசித்திரமான பட்டியலையும் திரைக்கு கொண்டு வருகிறது.
2. சிலேடை–தகுதியான நிகழ்வுகள்
கன்னித் தீவில் மேலும் பல நகைச்சுவைகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். வார்தை விளையாட்டு, சிலேடை, ஓவியங்கள், சிறு நகைச்சுவை நாடகம் போன்ற பல நகைச்சுவைமிக்க தருணங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது கன்னி தீவு.
3. பிரபல விருந்தினர்கள்
தங்களுக்குப் பிடித்த பிரபலத்தை திரையில் பார்ப்பதை யார்தான் விரும்புவதில்லை? இந்த நிகழ்ச்சியில் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற பிரபலங்கள் பலரும் இடம்பெறுவார்கள், அவர்கள் விருந்தினர்களுடன் ஒரு வேடிக்கையான அன்பான விஷயங்களை பகிர்ந்துகொள்வதோடு, அவர்களுக்கான நிகழ்ச்சியாகவே அது இருக்கும்.
4. கிராண்ட் செட்
கன்னித் தீவு ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கருப்பொருளுடன் எதிரொலிக்கும். மேலும் ஆடம்பர வடிவமைப்புகளுடன் காட்சி விருந்துக்கு உங்களைத் தயார்படுத்தும். சோர்வடைந்த கண்களுக்கு இது ஒரு சிறந்த காட்சியாக இருக்கும்.
5. உங்கள் கற்பனைக்கு உணவு
இந்த நிகழ்ச்சி கருப்பொருள்களையும் கருத்துகளையும் பெட்டியிலிருந்து கொண்டு வந்து பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும், கற்பனையின் எந்த விஷயத்தையும் விட்டுவிடாது, உற்சாகமான நீடித்த எண்ணங்களை மட்டுமே உங்களிடம் விட்டுச் செல்லும். அத்துடன் மட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் மற்றும் நம்மை சுற்றியுள்ள தற்போதைய நிகழ்வுகளையும், விரைவான அறிவார்ந்த பாணியையும் கொண்டு வரும்.
கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 என்னும் நையாண்டி–நகைச்சுவை நிகழ்ச்சியானது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் 1 ஆகஸ்ட், 2021, ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.