தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்கியது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்கியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா.தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,500ஐ கடந்தது.

கடலூரில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா.தமிழகத்தில் இதுவரை 1.88 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 13,413 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல்.தமிழகம் - பலி எண்ணிக்கை 35 ஆனது.

சென்னையில் இன்று ஸ்டான்லி மருத்துவமனையில் 68 வயதுடைய ஆண், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 59 வயது ஆண் என இருவர் உயிரிழப்பு.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 324, அரியலூரில் 188, கடலூரில் 95, காஞ்சிபுரத்தில் 45, திருவள்ளூரில் 34, திருவண்ணாமலையில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.